பக்கங்கள்

தினமொரு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்

ஏதோ எங்களுக்கு தெரிஞ்சத உங்களுக்கு சொல்லுறோம்

Wednesday, December 14, 2011

IP WEBCAM

நண்பர்களே இன்று நாம் பரிந்துரைக்கும் மென்பொருள் உபயோகிக்க மிக எளிதுமான நவீன காலகட்டத்தில் அவசியமானதுமான் ஒரு ஆன்ட்ராய்ட் மென்பொருள் ஆகும்.. "IP WEBCAM"


உங்களது ஆன்ட்ராய்ட் அலைபேசியில் உள்ள கேமராவினை படம் எடுப்பதை தவிற வேறு எதாவது விஷயங்களுக்கு உபயோகப் படுத்தி உள்ளீர்களா..? சரி.. நமது அலைபேசியின் கேமராவை கணிணியுடன் இணைத்து வெப் கேம் ஆகவோ அல்லது கண்காணிப்பு கேமராவாகவோ இலவசமாக உபயோகப் படுத்த முடிந்தால் எப்படி இருக்கும் ..? மிக அற்புதமான விஷயமாக் இருக்கும் அல்லவா..?


இந்த உபயோகங்களுக்காக நாம் இன்று தர இருக்கும் மென்பொருளே
"IP WEBCAM" ஆகும்.. இந்த மென்பொருளை நமது ஆன்ட்ராய்ட் அலைபேசியில் நிறுவது மூலம் கணிணியுடனான நமது அலிபேசியியின் பயன்பாட்டை அதிகரிக்க இயலும்.. எவ்வறெனில் ஸ்கைப் , மற்றும் வீடியோ சாட்டிங் போன்றவற்றை மேற்கொள்ள நமது அலைபேசியையே வெப்கேமராவாக பயன்படுத்திக் கொள்ள இயலும். அது மட்டுமல்லாது நீங்கள் அலைபேசியில் எடுக்கும் வீடியோவை உலகின் எந்த மூலைக்கும் நேரடியாக இணையதளத்தில் உடனுக்குடன் நேரலையில் ஒளிபரப்ப இயலும்..



மேலும் இதை நாம் ஒயர் எதுவுமில்லாமல் ரிமோட்டாக செய்ய இயலும் ஆதலால் நமது அலைபேசியை கண்கானிப்பு கேமராவாக உபயோகிக்க இயலும்





இந்த மென்பொருளை நிறுவியபின் உப்யோகிப்பது எப்படி..? முதலில் அலைபேசியில் மென்பொருளை நிறுவியபின்பு அதில் கீழே கடைசியாக கொடுக்கப்பட்டுள்ள "START SERVER" ஐ க்ளிக் செய்யவும் நமது கேமரா ஓபன் ஆகி கீழே ஒரு IP முகவரியை காட்டும் அதை அப்படியே எடுத்து கணிணியின் பிரவுசரில் உள்ள அட்ரஸ் பாரில் பேஸ்ட் செய்தால் போதும்.. ஆன்ட்ராய்ட் வெப்காம் சர்வர் ஓபன் ஆகிவிடும் பின்பு சர்வரில் தெரியும் நாலாவது ஆப்சனான Use javascript to update frames in browser, ஐ க்ளிக் செய்தால் மொபைலின் வீடியோ அப்படியே நமது கணிணியின் திரையில் வந்து விடும்..


IP WEBCAM மென்பொருளை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லின்க் ஐ சொடுக்கவும்


CLICK_HERE


அல்லது பார்கோடு ஸ்கேனர் மூலம் பதிவிறக்கம் செய்ய கீழெ கொடுக்கப்பட்டுள்ள " QR CODE " ஐ ஸ்கேன் செய்யவும்


qrcode


பதிவிறக்கம் செய்து உபயோகித்துப் பார்த்து உங்கள் மேலான கருத்துகளை கமென்ட்டில் இடவும், நன்றிகள்...

5 comments:

கார்க்கிபவா said...

wow!

சாரதி said...

Nice one....

Ramesh said...

woo... nice tnx

Ramesh Yanthra said...

இதை இன்ஸ்டால் செய்து பிறகு நீக்கிவிட்டேன் , இதைவிட iStream app is better.

சேலம் தேவா said...

Install செய்தபிறகு Gmail Video chat (அ) Facebook Video chat-ல் உபயோகிப்பது எப்படி..?!

Post a Comment