பக்கங்கள்

தினமொரு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்

ஏதோ எங்களுக்கு தெரிஞ்சத உங்களுக்கு சொல்லுறோம்

Monday, December 19, 2011

Google Goggles

நண்பர்களே இன்று நாம் பரிந்துரைக்க இருக்கும் மென்பொருள் நமது ஆன்ட்ராய்ட் அலைபேசியின் கேமராவினைப் பயன்படுத்தி பல்வேறு தகவல்களை பெற உதவும் ஒரு அற்புதமான மென்பொருள் ஆகும்..


"Google Goggles" ஆன்ட்ராய்டுக்கென்று கிடைத்த ஒரு அதி அற்புத மென்பொருள் ஆகும்.. இதன் மூலம் நமது அலைபேசி கேமராவில் எடுக்கப்படும் புகைப்படங்களைக் கொண்டு அதீத தகவல்களை அறிய இயலும்..


இந்த மென்பொருளைக் கொண்டு வெறும் போட்டோ எடுப்பதன் மூலம் எந்த ஒரு பொருள், இடம் ஆகியவற்றின் தகவல்களை அறிய முடியும் மேலும் அனைத்து வகை பார் கோடுகள் மற்றும் கோடுகள் ஸ்கேன் செய்ய இயலும் .. ஒரு குறிப்பிட்ட பொருளை புகைப்படம் எடுத்து அதனுடன் உருவ ஒப்பீடு அல்லது அதைப்போல உள்ள வேறு பொருட்களையும் தகவலாகவும் மற்றும் புகைப்படமாகவும் பெற இயலும்..

மேலும் நீங்கள் வெளியில் செல்லும்போது குறிப்பிட்ட இடஙக்ளை போட்டோ மூலம் ஸ்கேன் செய்து தகவல்களை பெற இயலும் அது மட்டுமல்லாது புத்தகங்கள் , டிவிடி, மற்றும் வேற்று மொழி வார்த்தைகளையும் ஸ்கேன் செய்து தகவல் பெற இயலும்.. ஆன்ட்ராய்ட் பயனீட்டாளர்களுக்கு மிக முக்கியமான மென்பொருளாக இது இருக்கும் என்பதில் ஐயமில்லை..







"Google Goggles" மென்பொருளை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

CLICK_HERE

Link
அல்லது "BARCODE" ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்து நேரிடையாக பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப் பட்டுள்ள "QR-CODE" ஐ ஸ்கே செய்யவும்..




பதிவிறக்கம் செய்து உபயோகித்துப் பார்த்து உங்கள் கருத்துகளை கமென்ட்டில் இடவும்.. நன்றிகள்..





0 comments:

Post a Comment