பக்கங்கள்

தினமொரு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்

ஏதோ எங்களுக்கு தெரிஞ்சத உங்களுக்கு சொல்லுறோம்

Wednesday, November 30, 2011

PDF Scanner

இன்று நாங்கள் பரிந்துரைக்கும் மென்பொருள் "PDF SCANNER" ,

இந்த மென்பொருளின் மூலமாக, நீங்கள் விரும்பபி படிக்கும் புத்தகங்களில் எந்த ஒரு பக்கங்களையும் உங்கள் ஆன்ட்ராய்டு அலைபேசியின் கேமரா மூலமாக நொடிகளில் ஸ்கேன் செய்து அதை PDF ஃபார்மேட்டில் மாற்ற இயலும்...

தற்போது ஆண்ட்ராய்டு மார்கேட்டில் கிடைக்கும் "camscanner" போன்ற மென்பொருள்கள் எல்லா ஆன்ட்ராய்டு வெர்சன்களிலும் வேலை செய்வதில்ல அந்த குறையை நிவர்த்தி செய்யவே மிக எளிதாக நம் தள நண்பர்கள் அனைவரும் ஒன் டச் PDFபைல்களை உருவாக்கி பயன் பெறவே இந்த மென்பொருள். நிச்சயம் இது பயன் தரக்கூடிய ஒன்றாக அமையும் என்பதில் சந்தேகமில்லை..

பதிவிறக்கம் செய்து உபயோகித்து விட்டு கமென்ட் செய்ய மறவாதீர்கள் நண்பர்களே.

"PDF DOCUMENT SCANNER" ஐ பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

click_here


அல்லது நமது தளத்தில் ஏற்கனவே தரப்பட்ட "BARCODE SCANNER" மூலம் ஸ்கேன் செய்து நொடிகளில் பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப் பட்டுள்ள "QR CODE" ஐ ஸ்கேன் செய்யவும்..







Tuesday, November 29, 2011

SKYFIRE BROWSER 4.0

நண்பர்களின் ஏகோபித்த ஆதரவுக்கு நன்றிகள் தெரிவித்து நாங்கள் பரிந்துரைக்கும் அடுத்த அற்புதமான ஆண்ட்ராய்ட் மென்பொருள் "ஸ்கைஃபயர் பிரவுசர்" (skyfire browser)

இது வெறும் இணையதளப் பக்கங்களை பார்க்க மட்டுமன்றி எந்த ஒரு தளத்திலும் இருக்கும் ஆன்லைன் வீடியோக்களை , ஆண்ட்ராய்டின் எந்த ஒரு வெர்ஷனிலும் ஃப்ளே செய்கிறது. Flash Player சப்போர்ட் இல்லாத மொபைல்களில் Flash Player வீடியோக்களை பார்க்க உதவுகிறது.

இந்த வசதி ஆண்ட்ராய்டில் இன்பில்ட் ஆக வரும் பிரவுசர்களிலோ அல்லது ஒபேரா மினியிலோ இல்லை (ஒபேராவில் யூட்யூப் மட்டும் புதிய வெர்சனில் ஃப்ளே ஆகிரது )

நீங்கள் இந்த "SKYFIRE BROWSER"ஐ உங்கள் ஆண்ட்ராய்ட் அலைபேசியில் நிறுவி, கீழே பரிந்துரைக்க பட்டிருக்கும் லின்க் களின் மூலம் நேரடியாக கிரிக்கெட் ஆட்டங்களை உங்கள் அலைபேசியில் காண இயலும்

அது மட்டுமில்லாமல் சில குறிப்பிட்ட தொலைகாட்சிகளின் நேரடி நிகழ்ச்சி ஒளிபரப்புகளையும் நீங்கள் காண இயலும்.. இப்போது சொல்லுங்கள்.இது நல்ல மென்பொருள்தானே.? பதிவிறக்கம் செய்த பின்பு கமென்ட் செய்ய மறவாதீர்கள் நண்பர்களே..

"SKYFIRE BROWSER 4.0" ஐ பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும். 

click_here


பிரவுசரில் தொடர்ந்து வீடியோக்களை பார்க்க வீடியோ லைசென்ஸ் கீ பதிவிறக்க இங்கே சொடுக்குங்கள்.

click_here


அல்லது "பார்கோடு ஸ்கேனர்" மூலம் நேரடியாக பதிவிறக்க கீழே உள்ள "QR CODE" ஐ ஸ்கேன் செய்யவும்.




1.) அனைத்து நேரலை கிரிக்கெட் மேட்சுகளைப் பார்க்க சொடுக்கவும்

http://www.crictime.com/live-cricket-streaming.htm

2.) ஆன்ட்ராய்டில் புதிய தலைமுறை தொலைக்காட்சி நேரலையில் பெற சொடுக்கவும்..

http://puthiyathalaimurai.tv/news/

3.) ஆன்ட்ராய்டில் விஜய் டிவி, மற்றும் ஜெயா டிவி நேரலையில் பெற சொடுக்கவும்
http://livetvchannelsfree.in/jayatv.html

Link

Monday, November 28, 2011

SoundHound

நண்பர்களே மீண்டும் ஒரு அற்புதமான ஆண்ட்ராய்ட் மென்பொருளுடன் உங்களை சந்திக்கிறோம். இன்று நாம் பார்க்க இருக்கும் மென்பொருளின் பெயர்.. "SOUNDHOUND"

நாம் எதாவது ஒரு குறிப்பிட்ட mp3 பைலின் ஒரு பகுதியை மட்டும் வைத்திருப்போம் , அல்லது சில நேரங்களில் நம்மிடம் இருக்கும் mp3 பைலின் படத்தின் பெயர் மற்றும் இதர விபரங்கள் அறியாதவர்களாக இருப்போம்.இனி நாம் விரும்பும் எந்த ஒரு பாடல் அல்லது இசைக்கோர்வையின் முழுத் தகவல் மற்றும் அந்த பாடல் mp3அல்லது வீடியோவாக கிடைக்கும் தளங்கள் (உதாரணமாக யூ ட்யூப்) போன்ற விபரங்களை இந்த மென்பொருளின் உதவியுடன் பெற இயலும்.



அல்லது ஏதாவது ஒரு பாடல் அது எந்த மொழியாக இருப்பினும் தொலைக்காட்சியிலோ அல்லது மொபைலிலோ பாடிக் கொண்டு இருக்கும் போது இந்த மென்பொருளை உபயோகித்து அதை வெறும் 10 விநாடிகள் ரெக்கார்டு செய்தால் தானே அந்த முழு பாடல் குறித்த விபரம் மற்றும் அதன் வீடியோ mp3பதிவிறக்கம் கிடைக்கும் தளங்கள் குறித்த விபரங்களை ஒரு சில விநாடிகளில் தெரிவிக்கிறது...






"SOUNDHOUND" மென்பொருளை உங்கள் ஆண்ட்ராய்ட் அலைபேசியில் நிறுவ இங்கே சொடுக்கவும்.
CLICK_HERE


அல்லது "பார்கோடு ஸ்கேனர்" மூலம் ஸ்கேன் செய்து விநாடிகளில் பதிவிறக்கம் செய்ய கீழே இருக்கும் "QR code" ஐ ஸ்கேன் செய்யவும்.


Saturday, November 26, 2011

Barcode Scanner


அனைத்து நண்பர்களுக்கும் வணக்கங்கள் கூறி ஆரம்பிக்கிறோம்.

அனைத்து ஆண்ட்ராய்ட் அலைபேசிகளுலும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு மென்பொருள் "பார்கோடு ஸ்கேனர்" (Barcode scanner) ஆகும், இந்த மென்பொருள் மூலமாக அனைத்து வகை "QR CODE" களையும் ஸ்கேன் செய்ய இயலும்.. இதனால் என்ன உபயோகம், இனி வரும் நாட்களில் நமது தளத்தில் அனைத்து ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்களையும் கணிணியில் இருக்க கூடிய எவரும் இந்த ஒரு மென்பொருளின் மூலம் நீங்கள் நேரிடையாக உங்கள் அலைபேசிக்கு பதிவிறக்கம் செய்ய இயலும்.

"BARCODE SCANNER" அலைபேசியில் பதிவிறக்க இங்கே சொடுக்குங்கள்..

"BARCODE SCANNER" ஐ கணிணியில் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்குங்கள்..


உபயோகப்படுத்துவதும் முறை
பார்கோடு ஸ்கேனரை நீங்கள் உங்கள் அலைபேசியில் நிறுவிய பின்பு இனி நமது தளத்தில் கொடுக்கப்படும் குறிப்பிட்ட மென்பொருளுக்கான "QR CODE" ஐ அலைபேசியில் மூலம் கணிணித்திரையில் ஸ்கேன் செய்வதின் மூலம் ( மாதிரி படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது ) நேரிடையாக உங்கள் அலைபேசியில் பதிவிறக்கம் செய்ய இயலும்.