பக்கங்கள்

தினமொரு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்

ஏதோ எங்களுக்கு தெரிஞ்சத உங்களுக்கு சொல்லுறோம்

Friday, December 23, 2011

SMS Filter

நண்பர்களே இன்று நாம் பரிந்துரைக்க இருக்கும் மென்பொருள் நமது ஆண்ட்ராய்ட் அலைபேசியில் தேவையில்லாமல் வரும் குறுந்தகவல்களை தடுக்க உதவும் மென்பொருள் ஆகும் ”SMS Filter”


அன்றாடம் நாம் பல்வேறு வகையான மார்கெட்டிங் மற்றும் தேவையில்லாமல் இன்பாக்ஸை அடைக்கும் வகையில் வரக்கூடிய குறுந்தகவல்களை நூற்றுக் கணக்கில் பெறுகிறோம் இது சில நேரத்தில் நம்மை மிக எரிச்சலடையச் செய்யும் இதை தடுக்க இந்த மென்பொருள் உதவுகிறது..


எந்த ஒரு குறிப்பிட்ட எண்களில் இருந்து வரும் குறுந்தகவல்களை நாம் தடுக்க விரும்புகிறோமோ அந்த எண்களை இந்த மென்பொருளில் பதிவு செய்து வைத்து விட்டால் அதன் பிறகு அவற்றில் இருந்து வரும் அனைத்து குறுந்தகவல்களும் தடுக்கப் படும்.. இதன் மூலம் தேவையில்லாமல் வரும் குறுந்தகவல்களை தடுக்கவும் வேண்டுமெனில் மீண்டும் பெற்றுக் கொள்ளவும் இயலும்..






"SMS Filter" மென்பொருளை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லின்க்கை சொடுக்கவும்..
Link

CLICK_HERE


அல்லது "BARCODE SCANNER" மூலம் நேரடியாக ஆண்ட்ராய்ட் அலைபேசியில் பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள "QR- CODE" ஐ ஸ்கேன் செய்யவும்..


qrcode


மென்பொருளை பதிவிறக்கம் செய்து உபயோகித்துப் பார்த்து கருத்துகளை கமெண்ட்டில் இடவும்.. நன்றிகள்....

Tuesday, December 20, 2011

Pixlr-o-matic

நண்பர்களே இன்று நாம் பரிந்துரைக்க இருக்கும் மென்பொருள் நமது ஆண்ட்ராய்ட் அலைபேசியில் கேமரா மூலம் எடுக்கப் படும் படங்களுக்கு அழகு கூட்ட உதவும் ஒரு மென்பொருள் ஆகும்.. ”Pixlr-o-matic”


இந்த மென்பொருளின் மூலம் நாம் நமது அலைபேசியின் கேமராவில் எடுக்கும் படங்களின் தோற்றங்களை முற்றிலும் தேர்ந்த புகைப்பட கலைஞர் போல மற்றி அமைக்க இயலும்.. மிகக் கூர்மையான லைட்டிங்குகள், ரெட்ரோ எஃபட்ட்கள், மற்றும் ஷார்ப்னெஸ்,காண்ட்ராஸ்ட் போன்ற அனைத்து வேலைகளையும் இந்த ஒரே மென்பொருளின் மூலமாக செய்ய இயலும்..


அது தவிர புகைப்படங்களில் தேர்ந்தெடுத்த கிராபிக்ஸ் வேலைகள், விண்டேஜ் எஃபக்ட் போன்றவற்றையும் இதன் மூலம் செய்ய இயலும்.. குறிப்பிட்ட அளவுக்கும் மேலான எடிட் செய்யக் கூடிய ஆஃப்சன்கள் இதில் இலவசமாக கிடைக்கிறது..


Pixlr-o-matic மென்பொருளை பதிவிறக்கம் செய்ய கீழெ கொடுக்கப் பட்டுள்ள லின்க் ஐ சொடுக்கவும்..

CLICK_HERE


அல்லது BARCODE SCANNER மூலம் நேரடியாக பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப் பட்டுள்ள "QR CODE" ஐ ஸ்கேன் செய்யவும்..



qrcode


மென்பொருளை பதிவிறக்கம் செய்து உபயோகித்துப் பார்த்து கருத்துகளை கமெண்ட்டில் பதியவும்... நன்றிகள்...


Monday, December 19, 2011

RINGDROID

நண்பர்களே இன்று நாம் பரிந்துரைக்க இருக்கும் மென்பொருள் நமது ஆன்ட்ராய்ட் அலைபேசியிலேயே ரிங் டோன்களை நாமே உருவாக்கிக் கொள்ள உதவும் ஒரு அற்புத மென்பொருள் ஆகும்.. "Ringdroid"


இந்த மென்பொருளின் மூலம் நமது அலைபேசியில் உள்ள பாடல்களில் நமக்கு பிடித்தமான குறிப்பிட்ட வரிகளை மட்டும் தேர்வு செய்து அதனை மட்டும் தனியாக பிரித்து எடுத்து ரிங்டோனாக வைத்துக் கொள்ள இயலும்..


இது கணிணியில் செயல்படும் MP3 CUTTER போன்றதே ஆகும் இவ்வாறு செய்வதால் பாடலாக இருக்கும் ஃபைலுக்கு எவ்வித சேதமும் ஏற்படுவதில்லை.. இனி நமக்கு விருப்பமான ரிங்டோன்களை நமது ஆன்ட்ராய்ட் அலைபேசியிலேயே உருவாக்கலாம்..





"RINGDROID" மென்பொருளை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப் பட்டுள்ள லின்க் ஐ சொடுக்கவும்

CLICK_HERELink


அல்லது "BAR CODE SCANNER" மூலம் நேரிடையாக உங்கள் அலைபேசியில் பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப் பட்டுள்ள "QR CODE" ஐ ஸ்கேன் செய்யவும்..


qrcode


மென்பொருளை பதிவிறக்கம் செய்து உபயோகித்துப் பார்த்து உங்கள் மேலான கருத்துகளை கமென்ட்டில் இடவும்... நன்றிகள்...



Google Goggles

நண்பர்களே இன்று நாம் பரிந்துரைக்க இருக்கும் மென்பொருள் நமது ஆன்ட்ராய்ட் அலைபேசியின் கேமராவினைப் பயன்படுத்தி பல்வேறு தகவல்களை பெற உதவும் ஒரு அற்புதமான மென்பொருள் ஆகும்..


"Google Goggles" ஆன்ட்ராய்டுக்கென்று கிடைத்த ஒரு அதி அற்புத மென்பொருள் ஆகும்.. இதன் மூலம் நமது அலைபேசி கேமராவில் எடுக்கப்படும் புகைப்படங்களைக் கொண்டு அதீத தகவல்களை அறிய இயலும்..


இந்த மென்பொருளைக் கொண்டு வெறும் போட்டோ எடுப்பதன் மூலம் எந்த ஒரு பொருள், இடம் ஆகியவற்றின் தகவல்களை அறிய முடியும் மேலும் அனைத்து வகை பார் கோடுகள் மற்றும் கோடுகள் ஸ்கேன் செய்ய இயலும் .. ஒரு குறிப்பிட்ட பொருளை புகைப்படம் எடுத்து அதனுடன் உருவ ஒப்பீடு அல்லது அதைப்போல உள்ள வேறு பொருட்களையும் தகவலாகவும் மற்றும் புகைப்படமாகவும் பெற இயலும்..

மேலும் நீங்கள் வெளியில் செல்லும்போது குறிப்பிட்ட இடஙக்ளை போட்டோ மூலம் ஸ்கேன் செய்து தகவல்களை பெற இயலும் அது மட்டுமல்லாது புத்தகங்கள் , டிவிடி, மற்றும் வேற்று மொழி வார்த்தைகளையும் ஸ்கேன் செய்து தகவல் பெற இயலும்.. ஆன்ட்ராய்ட் பயனீட்டாளர்களுக்கு மிக முக்கியமான மென்பொருளாக இது இருக்கும் என்பதில் ஐயமில்லை..







"Google Goggles" மென்பொருளை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

CLICK_HERE

Link
அல்லது "BARCODE" ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்து நேரிடையாக பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப் பட்டுள்ள "QR-CODE" ஐ ஸ்கே செய்யவும்..




பதிவிறக்கம் செய்து உபயோகித்துப் பார்த்து உங்கள் கருத்துகளை கமென்ட்டில் இடவும்.. நன்றிகள்..





Saturday, December 17, 2011

Super Call Blocker

DND ஆக்டிவேட் செய்தும் கஸ்டமர் கேர் அழைப்புகள் வந்து தொல்லை செய்கிறதா? இதோ அவற்றிலிருந்து விடுபட ஒரு நல்ல மென்பொருள் Super Call Blocker.

இதில் உள்ள Block list இல் ஒரு எண்ணை சேர்ப்பதன் மூலம், அந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் அந்த அழைப்பை Block செய்துவிடும். கண்டிப்பாக அனைவரும் வைத்திருக்க வேண்டிய ஆண்ட்ராய்டு மென்பொருள்.

Screen Shots:

பதிவிறக்க: Click_here

அல்லது ஸ்கேன் செய்க
qrcode

Friday, December 16, 2011

LINE

ஆண்ட்ராய்டு டூ ஆண்ட்ராய்டு இலவசமாக அலைபேசவும், இலவச குறுஞ்செய்தி அனுப்பவும் உபயோகப்படும் மென்பொருள் LINE.


இதில்  இணைவதன்மூலம் நமது அலைபேசியின் Contact List இல் இருக்கும் எவரேனும் ஒருவர் இதே LINE ஐ உபயோகிக்கிறார் என்றால் அவருடன் இலவசமாக அலைபேசவோ அல்லது குறுஞ்செய்தி அனுப்பவோ இயலும். மேலும் இதில் இருக்கும் குரூப்-சாட் வசதி நிச்சயம் ஒரு இனிய அனுபவத்தை தருமென்பதில் சந்தேகமில்லை.

Screen Shots:

பதிவிறக்க click_here

அல்லது 
ஸ்கேன் செய்க
 

suggested by,
@raz_funz